வெடித்த மோதல்…! நள்ளிரவில் ஹாஸ்பிடலில் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர்கள்… அலறியடித்து ஓடிய மருத்துவர்கள்… திக் திக் வீடியோ வைரல்…!!

By Devi Ramu on ஐப்பசி 11, 2026

Spread the love

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள பிரபல அரசு டூன் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நள்ளிரவு 4:30 மணியளவில் இரண்டு மர்ம நபர்கள் கையில் கொடூரமான வெட்டுக்கத்தியுடன் புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு நோயாளிகளின் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒரு தரப்பினர் ஆத்திரமடைந்து நள்ளிரவில் ஆயுதங்களுடன் அவசர சிகிச்சைப் பிரிவிற்குள் நுழைந்துள்ளனர். உயிரைக் காக்கப் போராடும் நோயாளிகள் மற்றும் இரவுப் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் நடுவே இந்தச் சம்பவம் நடந்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த போலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மருத்துவமனைகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் மிகப்பெரிய கேள்வி எழுந்திருக்கிறது.