கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர், ஆன்லைன் விளையாட்டு மூலம் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த அஜய் என்ற 21 வயது இளைஞருடன் பழகத் தொடங்கியுள்ளார். நாளடைவில் இந்த நட்பு வீடியோ கால் மூலம் நெருக்கமான உரையாடல்களாக மாறியது. இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த இளைஞர், மாணவியிடம் ஆபாசமாகப் பேசி, அந்த உரையாடல்களை ரகசியமாகப் பதிவு செய்து மிரட்டத் தொடங்கியுள்ளார்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, நடந்த அனைத்தையும் அழுது கொண்டே தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். புகாரின் தீவிரத்தை உணர்ந்த காவல் துறை, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளியைக் கண்டறியத் தனிப்படை ஒன்றை அமைத்தனர். விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த அஜய் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குமரி மாவட்ட தனிப்படை போலீசார் சுமார் 2500 கிலோமீட்டர் தூரம் பயணித்து, ஆக்ராவில் பதுங்கியிருந்த குற்றவாளியை லாவகமாகச் சுற்றி வளைத்துப் பிடித்து மார்த்தாண்டம் அழைத்து வந்தனர்.
அஜய் மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆன்லைன் ஆபத்துகளால் ஒரு பள்ளி மாணவிக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறியாத நபர்களிடம் இணையம் வழியாகப் பழகும்போதும், தனிப்பட்ட தகவல்களைப் பகிரும்போதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…