“நாங்களே பார்த்துக்கிறோம்”…. ஈரானை தாக்கட்டுமா?… பாகிஸ்தான் தளபதியின் மூக்கை உடைத்த சவுதி அரேபியா…..!

Spread the love

ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், சவுதி அரேபியா மீது ஈரான் நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுக்க பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் முன்வந்துள்ளார். சவுதி அரேபியாவுடன் பாகிஸ்தான் கொண்டுள்ள பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், தேவைப்பட்டால் ஈரானைத் தாக்கத் தயார் என அவர் சவுதி பாதுகாப்புத் துறை அமைச்சர் காலித் சல்மானிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பின்போது, சவுதி அரேபியா பாகிஸ்தானின் உதவியை ஏற்க மறுத்துவிட்டது. பிராந்தியத்தில் போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்க சவுதி அரேபியா விரும்பவில்லை என்றும், பிரச்சனைகளை அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே விரும்புவதாகவும் சவுதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டு ராணுவ நடவடிக்கைகள் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைக்கும் என்று சவுதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சவுதி பாதுகாப்பு அமைச்சர் காலித் சல்மான், பாகிஸ்தான் தளபதியுடனான சந்திப்புக்குப் பின் வெளியிட்ட பதிவில், “ஈரான் தனது தவறான கணக்கீடுகளைத் தவிர்த்து அறிவார்ந்து செயல்பட வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்தார். ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், சவுதி அரேபியா கடுமையான எதிர் நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்பதை இது உணர்த்துவதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே கடந்த ஆண்டு கையெழுத்தான ‘பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின்’படி, இருநாடுகளும் தங்களுக்குள் ஏற்படும் தாக்குதல்களைத் தங்களுக்கு எதிரான தாக்குதலாகவே கருதி பதிலடி கொடுக்க வேண்டும். இருப்பினும், தற்போதைய சூழலில் சவுதி அரேபியா ஈரானுடன் நேரடி மோதலைத் தவிர்த்து, பதற்றத்தைத் தணிப்பதிலேயே அதிகக் கவனம் செலுத்தி வருகிறது.

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

6 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

6 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

7 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

7 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

7 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

7 மணத்தியாலங்கள் ago