“வேலையில்லையா? கவலைய விடுங்க…” தமிழக அரசின் நிதிஉதவி… 5 வருஷம் வெயிட் பண்ணதுக்கு பலன் கிடைச்சாச்சு… பட்டதாரி இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்…!

Spread the love

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதியான வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கான மாதாந்திர நிதியுதவித் திட்டத்தை அமல்படுத்த அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்கள் தங்கள் சொந்தச் செலவுகளுக்காகப் பெற்றோரை எதிர்பார்க்கக் கூடாது என்ற நோக்கில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவியும், டிப்ளமோ, ஐடிஐ மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.2,500 வரையும் வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ், வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.4,000ஆக உயர்த்தி வழங்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், இதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்பு உள்ளது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களின்படி, இத்திட்டத்தைப் பெற தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும், ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மேல் இருக்கக் கூடாது மற்றும் 40 வயது பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது (ஆதிதிராவிட பழங்குடியினருக்கு 45 வயது) போன்ற தகுதிகள் வரையறுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இத்திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ தகுதிகளையோ அல்லது விண்ணப்பிக்கும் முறைகளையோ அரசு இன்னும் முறைப்படி அறிவிக்கவில்லை. தேர்தல் வாக்குறுதிப்படி இந்த இளைஞர் நல நிதியுதவித் திட்டம் வருவது உறுதி என்றாலும், இதற்கான முழுமையான தகுதி வரம்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் இணையதள விவரங்கள் அனைத்தும் முதலமைச்சரின் ஒப்புதலோடு அதிகாரப்பூர்வ அரசாணையாக வெளியாகும் போது மட்டுமே முழுமையாகத் தெரியவரும். 200 யூனிட் இலவச மின்சாரம் போன்ற வாக்குறுதிகளை ஏற்கனவே நிறைவேற்றியுள்ள தவெக அரசு, இந்த மெகா பிளானையும் விரைவில் அரசாணையாக வெளியிடும் என்று ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Visaka

Recent Posts

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

4 மணத்தியாலங்கள் ago

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

4 மணத்தியாலங்கள் ago

“பைக்கும் செயினும் தரலையா?”… பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்… வரதட்சணை கேட்டு கொடுமை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…

4 மணத்தியாலங்கள் ago

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணல!”… கதறிய மகள்… கருவி சொன்ன பொய்… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து கதறி அழுத தாய்… மருத்துவமனையில் உடைந்த மர்மம்…!!

வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…

4 மணத்தியாலங்கள் ago

அதிசயமா? தெய்வத்தின் அவதாரமா?… ஆற்றில் கிடைத்த விசித்திர தாடைக்கல்… சாமி என திரண்டு வணங்கும் மக்கள்… நடந்தது என்ன?…!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…

4 மணத்தியாலங்கள் ago

வீடு திரும்பாத தந்தை… துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்… சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் சிக்கிய காமுகர்கள்…!!

பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…

4 மணத்தியாலங்கள் ago