மகளிருக்கு ரூ.2500 தள்ளிப்போகிறதா?… அதற்குள் இளைஞர்களுக்கு ரூ.4000 திட்டத்தை கையில் எடுத்த முதல்வர் விஜய்?… தவெக அரசின் அடுத்த அதிரடி உத்தரவு…!

By Nanthini on ஆனி 11, 2026

Spread the love

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று சரியாக ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. கடந்த மே 10-ஆம் தேதி தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற ஜோசப் விஜய், தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். ஏற்கனவே 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் விவசாயிகளுக்கான கூட்டுறவு பயிர்க்கடன் ரத்து போன்ற முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ள முதல்வர் விஜய், நேற்று பெண்களின் பாதுகாப்பிற்காக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டத்தையும் தொடங்கி வைத்தார். மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 வழங்கும் திட்டம் தற்போதைக்கு வழக்கம்போல ரூ.1,000 ஆகத் தொடரும் நிலையில், அடுத்ததாக இளைஞர்களுக்கான முக்கிய வாக்குறுதியை கையில் எடுத்துள்ளது தவெக அரசு.

அதன்படி, படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் பட்டதாரி இளைஞர்களின் பொருளாதாரத் தேவையைத் தற்காலிகமாகப் பூர்த்தி செய்யும் நோக்கில், மாதம் ரூ.4,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இளைஞர்கள் வேலை தேடும் காலகட்டத்தில் தங்களின் சொந்தச் செலவுகளுக்காகப் பெற்றோரைச் சார்ந்திருக்கக் கூடாது என்ற உன்னத நோக்கில் இத்திட்டம் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு அதிகாரிகள் மட்டத்தில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

   

இத்திட்டம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவலைத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் சமீபத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். சென்னை கிண்டியில் நடைபெற்ற அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான (ITI) மாணவர் சேர்க்கை மற்றும் தரவரிசைப் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வழங்கும் திட்டம் அரசின் தீவிரப் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

   

இளைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திட்டத்திற்கான தகுதி வரம்புகள், விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் இதர முழு விவரங்கள் அடங்கிய அரசாணை (GO) மிக விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் முகமது பர்வேஸ் தெரிவித்துள்ளார். தவெக அரசு பொறுப்பேற்ற இந்த ஒரு மாத காலத்திற்குள் அடுத்தடுத்து திட்டங்களைச் செயல்படுத்தி வருவது, வேலைவாய்ப்பின்றித் தவிக்கும் லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்களிடையே புதிய நம்பிக்கையையும், பெரும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.