இனி ‘பளபளக்கும்’… ரேஷன் அரிசியின் தரம் உயர்வு… பச்சை மற்றும் புழுங்கல் அரிசிக்கு வந்த புதிய விதிமுறை… ரேஷன் கார்டுதாரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்… மத்திய அரசின் அதிரடி முடிவு…!

By Visaka on ஆடி 10, 2026

Spread the love

மத்திய அரசின் புதிய ‘ஆர்.எம்.டி’ திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரத்தை உயர்த்த மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரக்குழு அதிகாரப்பூர்வ ஒப்புதலை வழங்கியுள்ளது. தற்போது இந்திய உணவுக் கழகத்தின் மத்திய சேமிப்புக் கிடங்குகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 122.64 மில்லியன் டன் உணவுத்தானியங்கள் கையிருப்பில் உள்ளன. இதில் வினியோகிக்கப்படும் அரிசியில் உள்ள உடைந்த அரிசியின் (குருணை) அளவைக் கணிசமாகக் குறைப்பதே இப்புதிய திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் தரமான, முழுமையான அரிசியைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, பச்சை அரிசியில் இதுவரை 25 சதவீதமாக இருந்த குருணையின் அளவு இனி 10 சதவீதமாகக் குறைக்கப்படும்; அதேபோல், புழுங்கல் அரிசியில் 16 சதவீதமாக இருந்த குருணையின் அளவு 5 சதவீதமாகக் குறைக்கப்பட உள்ளது. ஆந்திர மாநிலத்தில் சோதனை அடிப்படையில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இத்திட்டம், தற்போது நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நெல் அரைக்கும் போது கிடைக்கும் உடைந்த அரிசியை ஆலைகளிடமே ஒப்படைத்துவிட்டு, அதற்குப் பதிலாக அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கும் இந்த நடைமுறையால், இனி 100 கிலோ நெல்லில் இருந்து உயர்தர முழு அரிசி பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கப் போவது உறுதி செய்யப்பட்டுள்ளது.