கோவா கடற்கரையில் நடந்த அவலம்… வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை புகைப்படம் எடுத்து கண்ட இடத்தில் கை வைத்த ஆண்கள்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on கார்த்திகை 7, 2025

Spread the love

கோவாவில் பிரபலமான கடற்கரையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை துன்புறுத்தும் வகையில் நடந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவாவில் உள்ள அரம்போல் Arambol என்ற கடற்கரையில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில், இரண்டு வெளிநாட்டு பெண்களை அங்கிருந்த இந்திய ஆண்கள் குழு ஒன்று புகைப்படம் எடுக்கும்படி கட்டாயப்படுத்துவது தெரிகிறது. ஆண்கள் அந்த பெண்களைச் சுற்றி தங்கள் கைகளை வைத்திருப்பதை காண முடிகிறது.

அந்தப் பெண்கள் சங்கடமாகவும் தயக்கமாகவும் உணர்கின்றனர். வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்த பெண் சுற்றுலா பயணிகளை இந்திய சுற்றுலாப் பயணிகள் நடத்திய விதம் விவாதத்தை கிளப்பியுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதி இன்றி அவர்களின் புகைப்படங்களை எடுத்து அவர்களை உடல் ரீதியாக பல இடங்களில் தொட முயன்ற இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.