தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியவர் தான் ரியாஸ் கான். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிகை உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். உமாரியாஸ் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நடிகையாகவும் வலம் வருகிறார். இவர் பெரும்பாலான திரைப்படங்களில் வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வரும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களின் மூத்த மகனான சாரிக் ஹாசன் தற்போது சினிமா திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். இவர் பென்சில், டான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போதும் இவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்த நிலையில் கடந்த வாரம் சாரிக் திருமணம் அடையாறில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இந்த திருமணத்தை எளிமையாக நடத்த உமா மற்றும் ரியாஸ்கான் தம்பதியினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் தனது மகன் திருமணம் தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் இவர்கள் வெளியிடாமல் இருந்த நிலையில் உமா ரியாஸ் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருமகளை அறிமுகம் செய்திருந்தார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
அவரின் பெயர் மரியா ஜெனிஃபர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் எட்டாம் தேதி மாலை 4 மணி அளவில் சாரிக் ஹாசன் -மரியா திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவர்களின் திருமணம் கிறிஸ்டியன் முறைப்படி நடந்துள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க