தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் விக்ரம் ஆகியோர் இணைந்து நடித்த உல்லாச திரைப்படம் 1997 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் நடிகை மகேஸ்வரி. நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகள் தான் இவர். முதன்முதலாக 1994 ஆம் ஆண்டு க்ரண்ட்டிவீர் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பிறகு தமிழில் கருத்தம்மா என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் நடித்ததன் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

தனது முதல் திரைப்படத்திலேயே தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளில் 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் பாஞ்சாலங்குறிச்சி, நாம் இருவர் நமக்கு இருவர், உல்லாசம், என்னுயிர் நீதானே மற்றும் சுயம்வரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பொதுவாகவே நடிகைகள் சினிமா துறையில் 15 படம் நடிப்பதே மிகப்பெரிய விஷயம் தான். அதன் பிறகும் நீண்ட நாள் நடிகையாக இருப்பது சற்று சிரமமான ஒன்று. நடிகை மகேஸ்வரிக்கும் சினிமா துறையில் கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. பின்னர் மகேஸ்வரியும் வழக்கம் போல மற்ற நடிகைகள் செய்வதை தான் அவரும் செய்தார். அதாவது வெள்ளித் தலையிலிருந்து சின்னத்திரைக்கு வந்து சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.

அதே சமயம் இவர் சிறுவயதிலிருந்தே பேஷன் டிசைனிங் மீது ஆர்வம் கொண்டவர். அதனால் சினிமா துறையில் ஒரு பக்கம் நடித்து இருந்தாலும் ஆடைகளுக்கு டிசைன் செய்யும் வேலையையும் செய்து கொண்டிருந்தார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் முழு கவனத்தையும் பேஷன் டிசைனில் செலுத்தினார். பிறகு ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இவர் சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவ்வாறு அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வர அதனை பார்த்த ரசிகர்கள் உல்லாசம் பட நடிகையா இது என கேட்டு வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
