தமிழ் சினிமாவில் நடித்த பல நடிகைகள் தங்களது அழகான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து விட்டு பின்னர் ஒரு சில திரைப்படங்களில் சினிமாவுக்கு டாட்டா பாய் பாய் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்கள். அப்படி தமிழில் ஒரு சில படங்களில் மற்றும் நடித்த மக்கள் மனதில் மிகப் பிரபலமாக வளம் வந்தவர் நடிகை அஞ்சலா ஜவேரி.
இவர் ஹிந்தி மொழியில் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். இந்தியில் அறிமுகமான அதே வருடம் தமிழில் அஜித் மற்றும் சத்யராஜ் நடிப்பில் உருவான பகைவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பின்னர் தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார். கவர்ச்சி நடிகை ஆகவும் வளம் வந்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் பிரபுதேவா நடிப்பில் உருவான உள்ளம் கொள்ளை போகுதே என்கின்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் ரசிகர்கள் இவரை தனது கனவு கனியாக பார்க்க தொடங்கினார். இதை தொடர்ந்து நீண்ட வருடம் கழித்து இனிது இனிது திரைப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் தமிழ் சினிமாவுக்கு டாட்டா காட்டி விட்டு இந்தி மொழியில் மட்டுமே நடித்து வந்தார். இவர் ஹிந்தியில் சல்மான் கான் மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர் 1997 ஆம் ஆண்டு தருண் அரோகரா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
நடிகை அஞ்சலா ஜவேரிக்கு தற்போது 52 வயது ஆகின்றது. 90-களின் பேவரைட் நடிகையாக இருந்த இவர் தற்போது சினிமாவை விட்டு விலகி குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார். இந்நிலையில் இவரின் ரீசன் போட்டோஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இன்னும் அழகு குறையாமல் அப்படியே இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.