Connect with us

மேட்ரிமோனி பரிதாபங்கள்.. 1 இல்ல 2 இல்ல 46 லட்சம்.. சென்னை இன்ஜினியரை மயக்கிய இங்கிலாந்து பெண்..

CINEMA

மேட்ரிமோனி பரிதாபங்கள்.. 1 இல்ல 2 இல்ல 46 லட்சம்.. சென்னை இன்ஜினியரை மயக்கிய இங்கிலாந்து பெண்..

 

சென்னையில் இருக்கும் ஐ.டி கம்பெனியில் புதுச்சேரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் திருமண தகவல் மையத்தில் மணப்பெண் தேடி வந்தார். அப்போது திருமண தகவல் மையம் மூலம் இங்கிலாந்து நாட்டிலிருந்து அனிதா என்ற பெண் அறிமுகமானார்.

   

அவர் ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசி திருமணம் செய்து கொள்வதாக இருவரும் தகவல்களை பரிமாறி கொண்டனர். இதனையடுத்து கிரிப்டோ கரன்சியல் முதலீடு செய்வது பற்றி கற்றுத் தருவதாக அனிதா கூறினார். இதனை நம்பி அனிதா கூறிய வங்கி கணக்கிற்கு ராமகிருஷ்ணன் 46 லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அதன்பிறகு அனிதாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமகிருஷ்ணன் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மோசடி செய்த இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

author avatar
Priya Ram
Continue Reading
To Top