இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்பட உலக தலைவர்கள் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லிக்கு வந்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, முதலீடு, தொழில் குறித்து பேசி உள்ளார்.
முன்னதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் டெல்லி அக்ஷர்தாம் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார். இதனையடுத்து அங்கு ஆன்மீக சேவையில் ஈடுபட்டவர்களுடன் ரிஷி சுனக் கலந்துரையாடினார். அவர்களது வருகையை முன்னிட்டு கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இங்கிலாந்து பிரதமராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக இந்தியா வந்த ரிஷி சுனக் பிரதமர் நரேந்திர மோடி மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக கூறினார். இதனை தொடர்ந்து ரிஷி சுனக் உலக தலைவர்களுடன் சேர்ந்து மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார். இதற்கிடையே இங்கிலாந்து பிரதமர் தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்று வழிபட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…