ஏலியன்கள் இருப்பது உண்மையா?… அமெரிக்கா ஏவுகணை மீது மோதிய மர்ம பொருள்… வெளிவந்த ரகசிய வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 11, 2025

Spread the love

பல வருடங்களாகவே உலகம் முழுவதும் UFO மர்மம் தொடர்பான விவாதங்கள் தான் நடந்து கொண்டிருக்கிறது. வானில் பறக்கும் இந்த மர்ம பொருள்கள் குறித்து வெளிவரும் ஒவ்வொரு தகவலும் மக்களை அதிர வைக்கிறது. 2024 ஆம் ஆண்டு ஏமன் கடற்கரையில் மேலிருந்து பறந்த மர்மமான UFO மீது அமெரிக்க ஏவுகணை நேரடியாக மோதியதாக தகவல் வெளியாக்கிய நிலையில் இந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதால் அமெரிக்க பாதுகாப்பு துறை இதனை ரகசியமாக வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த ரகசிய வீடியோ காட்சி சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் விண்வெளியில் பறந்து வரும் மர்ம பொருட்கள் மீது நிலத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை மோதும் காட்சி தெளிவாகத் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதனுடன் தொடர்பான பாதுகாப்பு ஆய்வுகளை வெளியிட அமெரிக்கா விரிவான விளக்கங்களை வழங்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலம் UFO உண்மையில் உள்ளதா என்ற கேள்வி உலகம் முழுவதும் மீண்டும் விவாதிக்கப்பட தொடங்கியுள்ளது.