110 மாவட்டங்கள்.. கைமாறும் முக்கியப் பதவிகள்…. அறிவாலயத்தை அதிர வைக்கும் ‘சீனியர்கள் vs இளைஞர்கள்’ மோதல்… உதயநிதி போட்ட அதிரடி லிஸ்ட்.. ஸ்டாலின் எடுக்கப் போகும் ஷாக் முடிவு…!

By Nanthini on கார்த்திகை 4, 2026

Spread the love

திமுகவில் மாவட்டங்களின் எண்ணிக்கை 110-ஆகப் பிரிக்கப்பட்டு மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இடைத்தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து கட்சிப் பணிகளில் மீண்டும் வேகம் பிறந்துள்ளது. நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த ஆலோசனைகளில் மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதனால் அறிவாலயம் மற்றும் கட்சி வட்டாரத்தில் யாருக்குப் பதவி கிடைக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பும் பரபரப்பும் தொற்றிக் கொண்டுள்ளது.

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதில் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக உள்ளார். இதுதொடர்பாக அவர் தரப்பிலிருந்து பரிந்துரை கடிதம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மறுபுறம், தென் மாவட்டங்களில் தனது ஆதரவாளர்களைப் பதவியில் அமர்த்த கனிமொழியும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன், பதவியை இழக்கும் சீனியர் நிர்வாகிகளும் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்திப் பரிந்துரை கடிதங்களைக் கொடுத்துள்ளனர்.

   

கட்சியில் புதிய ரத்தம் பாய்ச்சுவதற்காக இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை ஒருபுறம் இருக்க, மறுசீரமைப்பு குழுவின் பரிந்துரைகளும் பரிசீலனையில் உள்ளன. இருப்பினும், இந்த அனைத்துப் பரிந்துரைகளிலும் யாருடைய சிபாரிசுகளை ஸ்டாலின் ஏற்கப் போகிறார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. சீனியர்களின் அதிருப்தியைச் சம்பாதிக்காமல், எதிர்கால தேர்தல்களைக் கருத்தில் கொண்டு ஸ்டாலின் எடுக்கப் போகும் இறுதி முடிவு என்ன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.