திமுக இளைஞரணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், கட்சியின் மூத்த தலைவர்களுடன் போதிய தொடர்பில்லாமல் விலகியிருப்பது கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்குக் கடுமையான உள்கட்சி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய் நேரடியாக ஆட்சியைப் பிடித்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், ஆளும் தவெக அரசுக்கு எதிராக நேரடி களப்போராட்டத்தில் இறங்காமல் உதயநிதி தொடர்ந்து அறிக்கை மட்டுமே வெளியிட்டு வருவது மூத்த நிர்வாகிகளிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
விஜய் பெரியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தாமலேயே ஆட்சியைக் கைப்பற்றியதால், அறிக்கைகள் மற்றும் சோஷியல் மீடியா பிரச்சாரங்களே போதுமானது என உதயநிதி தரப்பு எண்ணுகிறது. ஆனால், பாரம்பரியமான களப்போராட்டத்தைக் கைவிட்டு சீனியர்களை ஒதுக்குவது கட்சிக்கு மிகப் பெரிய பலவீனமாக அமையும் என மூத்த தலைவர்கள் எச்சரித்து வருவதால் திமுக உள்கட்சியில் பெரும் புயல் வீசி வருகிறது.
