திமுகவில் அதிரடி திருப்பம்…. இளைஞரணி பதவியில் இருந்து உதயநிதி ஸ்டாலின் விலகல்?… ஸ்டாலின் எடுத்த அந்த ஒரு முடிவு…. கசிந்த அறிவாலய ரகசியம்..!

By Nanthini on ஆடி 18, 2026

Spread the love

திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விலகவுள்ளதாகவும், கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அவருக்கு செயல் தலைவர், முதன்மை செயலாளர் அல்லது பொருளாளர் ஆகியவற்றில் ஒரு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு கட்சியின் வெற்றியில் முக்கியப் பங்காற்றியதோடு, அமைச்சராகவும் மக்கள் மத்தியில் தடம் பதித்துள்ள அவருக்கு, அடிமட்டத் தொண்டர்கள் முதல் மூத்த நிர்வாகிகள் வரை பலத்த ஆதரவு உள்ளது.

தற்போதைய அரசியல் சூழல், கட்சியின் எதிர்காலக் கட்டமைப்பு மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிகளைத் தக்கவைப்பது ஆகியவற்றைத் துரிதப்படுத்த, அவருக்கு செயல் தலைவர் பொறுப்பை வழங்குவதே மிகச் சிறந்த தேர்வாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஏனெனில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தீவிர அரசியலில் இருந்தபோதே ஸ்டாலின் அவர்களுக்கு செயல் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டு, அவர் கட்சியை அடுத்த கட்டத்திற்கு வழிநடத்தப் பக்குவப்படுத்தப்பட்டார். அதே பாணியில் உதயநிதி அவர்களுக்கும் செயல் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டால், அது இளைஞர்களைக் கவர்வதோடு ஒட்டுமொத்தக் கட்சியையும் புதிய வீரியத்துடன் ஒருங்கிணைக்க ஏதுவாக இருக்கும்.