தாத்தாவின் கோட்டையை பிடிக்கிறாரா பேரன்?…. திடீரென ரூட்டை மாற்றிய உதயநிதி?…. 2026 தேர்தல் களத்தில் நடக்கப்போகும் அந்த ‘ட்விஸ்ட்’…!

By Nanthini on பங்குனி 8, 2026

Spread the love

கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் களம் கண்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின், மிகக் குறுகிய காலத்திலேயே அமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் என அரசியலில் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளார். வரும் தேர்தலில் அவர் தனது தாத்தாவும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் கோட்டையான திருவாரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவின.

இந்நிலையில், இதுகுறித்த கேள்விக்குத் தூத்துக்குடியில் பதிலளித்த உதயநிதி, தான் எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதைத் திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என்றும், அவர் கைகாட்டும் தொகுதியில் பணியாற்றுவதே தனது பணி என்றும் கூறி இந்த விவாதங்களுக்குப் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.