சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் தம்பதிகளான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், இயக்குனர் கிருத்திகா உதயநிதியும் அவ்வப்போது தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் நகைச்சுவையான பதிவுகள் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில், தற்போது கிருத்திகா உதயநிதி வெளியிட்ட பதிவு ஒன்றுக்கு, உதயநிதி ஸ்டாலின் அளித்த நகைச்சுவையான பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிருத்திகா உதயநிதி தனது பதிவில், “பிரபலம் யார் என்பது முக்கியமல்ல, உங்களைச் சுற்றியுள்ளவர்களின் பார்வையில் நீங்களாக இருக்க முயற்சிக்கும்போது, உங்கள் சுயத்தை இழந்து கடுமையான சிக்கலில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்” என்ற கருத்தைப் பகிர்ந்திருந்தார். இது குறித்து இணையத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்த நிலையில், இதற்குப் பதிலளிக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் ஒரு வீடியோவை இணைத்துப் பதிவிட்டார்.

அந்த வீடியோவில், கிருத்திகா உதயநிதி ராயல் என்பீல்டு பைக்கை ஓட்டக் கற்றுக்கொள்வது இடம்பெற்றிருந்தது. அதனுடன் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் ‘சின்னத்தம்பி’ பட நகைச்சுவைக் காட்சியை இணைத்து, “நீங்கள் பெரிய பிரபலமாக இருக்கலாம், ஆனால் பார்த்து வண்டி ஓட்டணும்!” என்று உதயநிதி ஸ்டாலின் கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார். கணவர் மனைவியை நகைச்சுவையுடன் கிண்டல் செய்த விதம் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
திரைப்பட இயக்குனரான கிருத்திகா, ஏற்கனவே உதயநிதி ஸ்டாலினின் கருத்துகளுக்கு நகைச்சுவையாகப் பதிலளித்து பலமுறை கவனத்தைப் பெற்றுள்ளார். இத்தகைய சுவாரஸ்யமான மற்றும் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள், இத்தம்பதியினரின் மீதான மக்களின் அன்பை மேலும் அதிகரித்துள்ளன. கிருத்திகாவின் பைக் ஓட்டும் திறமை குறித்த இந்த நகைச்சுவைப் பதிவு, இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
U can be a big Celebrity ! But paathu vandi ottanum pic.twitter.com/GH9kd0lidC
— Udhay – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Udhaystalin) March 9, 2026
