“மாண்புமிகு சங்கி அமைச்சர்… மாண்புமிகு பாத்ரூமில் 3 மணி நேரம் அமர்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர்”…. உதயநிதி ஸ்டாலின் – அமைச்சர் நிர்மல் குமார் நேருக்கு நேர் மோதல்…..!

Spread the love

தமிழகச் சட்டப்பேரவையில் இன்று நீதி, சிறை, சட்டம், எரிசக்தி மற்றும் அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், தவெக ஆட்சியில் மின்சாரத் துறை சரியாக நிர்வகிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்குப் பதிலளிக்க எழுந்த எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல் குமார், “கடந்த 5 ஆண்டுகளில் மின்சார வாரியம் பட்ட பாடுகளைச் சொல்கிறேன்” என்று தன் உரையைத் தொடங்கினார். அப்போது செந்தில் பாலாஜி குறித்துப் பேசுகையில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட ஒரு வார்த்தையைக் குறிப்பிட்டுவிட்டு, உடனடியாக “சாரி… முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி” எனத் திருத்திக் கூறினார். இதற்குத் திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, நிர்மல் குமார் அந்த வார்த்தையைத் திரும்பப் பெற்றுக் கொண்டதோடு, அது அவைக்குறிப்பில் இருந்தும் நீக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “மாண்புமிகு சங்கி அமைச்சர்… சாரி சாரி மாண்புமிகு எரிசக்தித் துறை அமைச்சர்” என்று குறிப்பிட்டது பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் நிர்மல் குமார், “மாண்புமிகு பாத்ரூமில் 3 மணி நேரம் அமர்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர்…” என்று தங்களாலும் பேச முடியும் என எச்சரிக்கை விடுத்தார். இதற்குக் காரசாரமாகப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தில் யார் யார் பாத்ரூமில் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதைக் கணக்கெடுக்க ஒரு அமைச்சரை வைத்திருக்கிறீர்களா? முதலில் யார் தவறாகப் பேசத் தொடங்கியது என்பது பேரவைத் தலைவருக்குத் தெளிவாகத் தெரியும்” எனக் கேள்வி எழுப்பினார்.

இந்த காரசார விவாதத்தைத் தொடர்ந்துப் பேசிய ஆதவ் அர்ஜுனா, “நான் பேசுவதைக் கேட்டுவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் பேசட்டும்” என்று கூறிப் பேசிய வார்த்தையும் உடனடியாக அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. தொடர்ந்து பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புள்ளிவிவரங்களுடன்தான் கேள்விகளை எழுப்பினார்; ஆனால் தவறான வார்த்தைப் பயன்பாட்டை யார் முதலில் தொடங்கினார்கள் என்பதைச் சபாநாயகர் கவனிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதன்பின்னர் தொடர்ந்த அமைச்சர் நிர்மல் குமார், திமுக ஆட்சிக் காலத்தில் மின்சாரத் துறையில் 4 அமைச்சர்கள் மாற்றப்பட்ட நிர்வாகச் சிக்கல்களைப் பட்டியலிட்டார். “சுமார் 15,000 பேர் ஓய்வு பெற்ற நிலையில் வெறும் 343 பேர் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்; நிர்வாக அளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார். அதற்குப் பதிலளித்த செந்தில் பாலாஜி, “அமைச்சரவையை மாற்றுவதும் நிர்வாகத்தைச் சீரமைப்பதும் முதலமைச்சரின் தனிப்பட்ட உரிமை; தவெக ஆட்சியில் அமைச்சரவையை மாற்றவே மாட்டோம் என உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார். இருதரப்பு குற்றச்சாட்டுகளால் சட்டப்பேரவை சிறிது நேரம் களேபரமாகக் காட்சியளித்தது.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

6 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

6 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

6 மணத்தியாலங்கள் ago