”என்ன சார்.. என்ன பேசுனாலும் பேச விடமாட்றீங்க.. என்ன சார் பிரச்சனை”… பேரவையில் அமைச்சரை அசெம்பிளியில் வைத்து ‘ரோஸ்ட்’ செய்த உதயநிதி….!

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது நடைபெற்ற சுவாரஸ்ய விவாதம் ஒன்று அவையில் இருந்த உறுப்பினர்களை வெகுவாகக் கவரச் செய்தது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு விளையாட்டு அரங்கம், மாணவ-மாணவியருக்கு தனித்தனி விடுதிகள் மற்றும் வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் வில்லவநாதன் கோரிக்கை முன்வைத்தார். இதற்குப் பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், மாநிலத்தில் உள்ள கல்லூரிகளின் விளையாட்டு மைதான வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விளக்கம் அளித்தார்.

இருப்பினும், அமைச்சர் பதிலளிக்கும் போதே பிற விவரங்களையும் சேர்த்துப் பேச முற்பட்டதால், சபாநாயகர் மற்றும் பிற உறுப்பினர்கள் குறுக்கிட்டு, கேள்விக்குரிய குறிப்பிட்ட விவகாரத்துடன் பதில்களை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “சட்டமன்ற உறுப்பினர் கல்லூரிக்கு அரங்கம் மட்டுமே கேட்டுள்ளார்; ஆனால் அமைச்சர் அளிக்கும் பதிலோ, யாரும் அவசரப்பட்டு கோரிக்கை வைத்துவிடாதீர்கள், யோசித்து கேளுங்கள் என்பது போல் இருக்கிறது” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இதனால் சட்டப்பேரவையில் திடீரென சிரிப்பலை ஏற்பட்டது.

உதயநிதி ஸ்டாலினின் இந்த கிண்டலான கருத்தைக் கேட்டு அவையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் குலுங்கிச் சிரித்தனர். இதற்குப் பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், எதிர்க்கட்சித் தலைவர் மிகவும் அழகான கருத்தைப் பதிவு செய்திருப்பதாகக் கூறியதுடன், “அவையில் எதையும் பேசக்கூடாதா?” என்று கலகலப்பாகக் கேட்டார். அமைச்சரின் இந்த எதிர்பாராத பதில் அவையில் மீண்டும் சிரிப்பலையை ஏற்படுத்தியதுடன், சில விவாதங்களுக்கு மத்தியில் சட்டப்பேரவைச் சூழலை மிகவும் இயல்பாகவும் கலகலப்பாகவும் மாற்றியது.

Nanthini

Recent Posts

“18 இடங்களில் எலும்பு முறிவு… கோமாவில் தள்ளப்பட்ட பெண் ஆசிரியர்…” விபத்தில் கணவர் பலி… ஒரே நொடியில் சிதைந்த குடும்பம்…. பயங்கர சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள இட்டேரா பகுதியில், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த நீரஜ்…

5 minutes ago

“மடியில் அமர வைத்து… கழிவறைக்கு வந்தார்…” கேள்வித்தாள் வாங்க வந்த 8-ஆம் வகுப்பு மாணவிக்கு ஷாக்…. மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர்…. பகீர் பின்னணி…!!

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் மகேஷ் பிரசாத் யாதவ்.…

20 minutes ago

“உடலில் தீப்பற்றி அலறியபடி ஓடிய காதலி…” பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து…! கள்ளக்காதலை துண்டித்ததால் ஆத்திரமடைந்த பிரகாஷ்…! பகீர் பின்னணி…!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வரும் ராஜேஸ்வரி (36) என்பவருக்கும், மாதவரத்தைச் சேர்ந்த…

34 minutes ago

“அம்மா அந்த சித்தப்பா என்னை..” 8 வயது சிறுமியை கார் பார்க்கிங்கிற்கு அழைத்து சென்று…! விளையாட சென்ற போது அரங்கேறிய கொடுமை… பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு பகுதி கங்காகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி (45). சிமெண்ட் கடை மற்றும் நில…

47 minutes ago

“தப்பு பண்ணிட்டேன்… நான் அப்படி சொல்லிருக்க கூடாது…” ஐ.ஐ.டி பாம்பே மாணவர் தற்கொலை… மகனை இழந்த தந்தையின் கண்ணீர்…. பெரும் சோகம்…!!

மும்பை ஐ.ஐ.டி-யில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சாஹில் வாகோடே என்ற மாணவர், கடந்த 18-ம் தேதி தூக்கிட்டுத்…

58 minutes ago

ராங் ரூட்டில் போறீங்க…” பைக்கில் வந்து அட்ராசிட்டி… ஊழியரை கொடூரமாக தாக்கி கொன்ற கும்பல்…. பதற வைக்கும் CCTV காட்சிகள்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் மாவட்டம் கோகாமேடி சுங்கச்சாவடியில் 21 வயதான காளு லால் என்ற வாலிபர் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.…

1 மணத்தியாலம் ago