பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு குறைந்த விலையில் கடன் உதவி திட்டம், மானிய கடன் உதவி திட்டம், சொந்தமாக தொழில் தொடங்க நிதி உதவி என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் சுய உதவி குழுவினர் தாங்கள் தயாரித்த பொருள்களை விற்பனைக்காக 100 கிலோ மீட்டர் வரை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என அவர் தெரிவித்துள்ளார். தங்களது அடையாள அட்டையை பயன்படுத்தி அதிகபட்சமாக 25 கிலோ எடையை மகளிர் சுய உதவி குழுவினர் பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
