சூலூர் சிறுமி கொலை வழக்கில் நடந்தது என்ன..? தமிழக முதல்வர் விஜய் அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள கடும் கண்டனம்..!

By Swetha on வைகாசி 25, 2026

Spread the love

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள் சட்டம்-ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு கடும் கண்டனங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளார். குறிப்பாக, கோயம்புத்தூர் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவத்தை சுட்டிக்காட்டி அவர் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

புதிய அரசு பதவியேற்ற வெறும் 12 நாட்களில் பாலியல் வன்முறை, கஞ்சா கடத்தல், ரவுடிசம், ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் என 30-க்கும் மேற்பட்ட பெரிய குற்றச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இந்த தொடர் சம்பவங்கள் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு மீது மிகப்பெரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளதாக அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

   

இனிவரும் காலங்களில் இதுபோன்ற கொடூரமான குற்றங்கள் தமிழகத்தில் நிகழாமல் தடுக்க, சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதில் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், சூலூர் சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது அரசு உடனடியாக மிகக் கடுமையான சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.