முதலமைச்சர் விஜய் கோட் சூட் அணிவது குறித்துப் பேசியதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “தான் கருப்பு கோட் அணிவது பெரியாரின் நினைவாகத்தான் என்று முதலமைச்சர் விஜய் கூறுவதை விட பெரிய பொய் (உருட்டு) ஏதும் இருக்க முடியாது; அவர் கோட் சூட் போடுவது இங்குப் பிரச்சினை இல்லை, எல்லாத் துறைகளிலும் தற்போதைய அரசு கோட்டை விட்டுக் கொண்டிருப்பதுதான் உண்மையான பிரச்சினை” என்று உதயநிதி சாடியுள்ளார். மேலும், எதைக் கேட்டாலும் அது தி.மு.க-வின் சதி என்று கூறும் விஜய், திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் பாணியில் ரைமிங்காகப் பேசுவதாகவும், யாருக்கு என்ன பதவி என்று முதலமைச்சருக்கே தெரியாத ஒரு ‘சோபா மாடல்’ ஆட்சிதான் தமிழகத்தில் நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக மக்கள் விரைவில் தவெக அரசின் முகத்திரையைக் கிழித்து அதற்கு முடிவரை எழுதுவார்கள் என்று குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் கவனிப்பதுதான் இந்த ஆட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமையப் போகிறது என்றும் கூறினார். முந்தைய தேர்தல்களில் தங்களின் பெயரைக் கூறி வாக்குக் கேட்டுவிட்டு, தற்போது நன்றி கூட சொல்லாமல் போன நன்றிகெட்ட கூட்டம் இது என்றும் அவர் சாடினார். மேலும், எமர்ஜென்சி காலத்தில் ஆட்சியை இழந்தாலும் மக்களுக்காக நின்ற பாரம்பரியம் தி.மு.க-வுக்கு உண்டு என்றும், எவ்வளவு பெரிய தோல்வி வந்தாலும் தங்களுக்குப் பயமில்லை, மீண்டும் எழுந்து வந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியை அமைப்போம் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்
