ஈரோட்டில் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி திமுக உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதேவேளையில், வலதுசாரி அமைப்பான ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடத்தப்படவுள்ள பேரணிக்குக் காவல்துறை அனுமதி வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. திராவிட இயக்கத் தலைவர்களின் பிறந்தநாள் நிகழ்வுகளுக்குத் தடை விதித்துவிட்டு, வலதுசாரி அமைப்புகளுக்கு அனுமதி வழங்கிய காவல்துறையின் இந்த இரட்டை நிலைக்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக அமைப்பினரும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெரியாரையும் அண்ணாவையும் கொள்கைத் தலைவர்களாகக் கூறிக்கொள்ளும் முதலமைச்சர், யாரைத் திருப்திப்படுத்துவதற்காக இத்தகைய முடிவை எடுத்துள்ளார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழ்நாட்டைச் செதுக்கிய தியாகத் தலைவர்களின் பிறந்தநாள் பேரணிகளுக்குத் தடை விதிப்பது திராவிடக் கொள்கைகளுக்கே எதிரானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காவல்துறை உண்மையில் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறதா அல்லது காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்டதா என்று சாடியுள்ள உதயநிதி, இந்த நடவடிக்கை அரசின் அடிமைத்தனத்தையும் ஆணவத்தையுமே காட்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள் பேரணிகளுக்குக் காவல்துறை உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…
குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…