“பெற்ற மகனை ஸ்டாலின் முறையாக வளர்க்கவில்லை”…. இனி எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது…. திமுகவை ஒரே அடியில் சாய்த்த அமைச்சர் ரமேஷ்….!

Spread the love

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார், மாணிக்க விநாயகர் மற்றும் தாயுமானவர் சன்னதிகளுக்கு வருகை தந்த அமைச்சர் ரமேஷ், சிறப்புச் சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் குறித்தும், எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் விமர்சனங்கள் குறித்தும் மிகக் காட்டமாகப் பதிலளித்தார். அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியான கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்ல முடியும் என்றும், வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஏதேனும் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகப் பேசுபவர்களுக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

முதல்வரின் லண்டன் பயணம் குறித்த எதிர்த்தரப்பின் கூச்சல்களுக்குப் பதிலடி கொடுத்த அமைச்சர், “வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதனால்தான் இபிஎஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் போயுள்ளது” எனச் சாடினார். முதலமைச்சர் விஜய் தமிழகத்தின் பெருமையை உலக அளவில் கொண்டு சேர்க்கும் வகையில் தெளிவான ஆட்சியை நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் சர்வதேச ரேஸ் பந்தயத்தைத் தொடங்கி வைப்பதற்காகவே முதல்வர் லண்டன் சென்றுள்ளதாகத் தெளிவுபடுத்தினார். உலக அளவில் விளையாட்டு மற்றும் தமிழர்களின் பெருமையை உயர்த்துவதே இந்த விஜயத்தின் முதன்மை நோக்கம் என்றும் விளக்கமளித்தார்.

திமுகவின் போராட்டங்களில் இடம்பெறும் விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு; ஆனால், அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசுவதை ஏற்க முடியாது என்றார். “ஆபாசமாகவும் இழிவாகவும் பேசுவதுதான் திமுகவின் டி.என்.ஏ. திமுக அமைச்சர்களும், கொளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள்” என்று சாடிய அமைச்சர், அமைச்சர்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள் எனக் குற்றம்சாட்டினார்.

தமிழக முதல்வர், அமைச்சர்கள் அல்லது பெண்கள் யாரை இழிவாகப் பேசினாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும், முன்னாள் அமைச்சர்கள் பொறுப்புணர்வோடு பேச வேண்டும் என்றும் எச்சரித்தார். குறிப்பாக, முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவைக் குறிப்பிட்ட அவர், “பேச்சில் அறம் இல்லாத ஒருவர் எவ்வாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தார்?” எனக் கேள்வி எழுப்பினார். பொதுவெளியில் அவதூறு பரப்புபவர்கள் மீது நிச்சயமாகத் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அமைச்சர், “மழை நின்றாலும் தூவானம் விடாது என்பார்கள்; அதுபோல கடந்த ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளைத் தான் தற்போதுள்ள அரசு சரிசெய்து வருகிறது” என்றார். கடந்த 5 ஆண்டு காலச் செய்தித்தாள்களைப் படிக்காதவர்கள்தான் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் சொல்வார்கள் என்றும், தமிழகத்தில் சட்ட ஒழுங்கைச் சீர்படுத்தி அமைதியை நிலவச் செய்ய முதல்வர் விஜய்யின் தலைமையிலான அரசு அனைத்துத் தீவிர நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றும் கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.

Nanthini

Recent Posts

திக் திக் திக்… பேக்கரிக்குள் புகுந்து செக்யூரிட்டியை.. கைகால் கட்டி கடத்தி 2 லட்சம் கொள்ளை… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள லிபா நகரில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்குள் ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறி…

15 seconds ago

ஐயோ… என்ன கொடுமை… வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் தாக்கிய சோகம்… 10-ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு… தெலுங்கானாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம், மார்க்குகு மண்டலத்தைச் சேர்ந்த போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான ராம் சரண். இவர்…

6 minutes ago

திக்… திக்… வீட்டில் சடலமாக கிடந்த கணவன்-மனைவி… கதறியபடி மீட்கப்பட்ட 2 வயது குழந்தை… பின்னணி என்ன?… கன்னோஜில் உலுக்கிய கொடூரம்…!

கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில், 32 வயதான சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஷிகா ஆகியோர்…

22 minutes ago

விபத்தா?… இல்ல கொலையா?… இதயத்தில் ஆணி பாய்ந்து ஊழியர்… துடிதுடித்து இறந்த பகீர் சம்பவம்… நெஞ்சை நடுங்கவைக்கும் சோகம்…!!

நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள மதுபானக் கடையில் பணியாற்றி வந்த 39 வயது ஊழியர் ஒருவர், நெஞ்சில் ஆணி பாய்ந்து…

29 minutes ago

இத்தனை வருஷ வேர்வை வீண் போகல… காவல் அதிகாரியின் நெகிழ்ச்சியான பதவி உயர்வு தருணம்… ஆனந்தக் கண்ணீரில் மூழ்கிய குடும்பம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

அமிர்தசரஸில் இருந்து வெளியான நெகிழ்ச்சியான சிசிடிவி காட்சி ஒன்று இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரண்ஜித்…

41 minutes ago