#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் விஜய் கடைசியாக கோட் படத்தில் நடித்து முடித்த நிலையில் தளபதி 69 படத்தில் மட்டும் அடுத்து நடித்து விட்டு அதன்பிறகு சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதனால் ரசிகர்கள் கவலையுடன் இருந்தாலும் மறுபுறம் அரசியலில் இறங்கியுள்ளதால் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
#image_title
இவருடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் கடந்த மாதம் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. லட்சோப லட்ச கூட்டம் வந்து அலைமோதியது. தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் வந்து பல லட்சம் தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள். இதனால் விஜய் அரசியலில் மிக தீவிரமாக இறங்கியுள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் பல்வேறு விதமான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். முன்னதாக விஜய் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசும் வழங்கி கௌரவப்படுத்தினார். தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.
#image_title
இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், விஜய் குறித்து பேசியுள்ளார். அதாவது கோபிநாத் அவரிடம் உங்களுக்கும், விஜய்க்குமான நட்பு எப்படி இருக்கிறது என்று கேட்டார். அதற்கு அவருடைய பிறந்தநாளன்று மெசேஜ் அனுப்பினேன். அதற்கு அவர் நன்றி சொல்லி பதில் அனுப்பினார் அவ்வளவு தான். வேறு எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
அந்த அளவிற்கு தான் எனக்கும் அவருக்குமான நட்பு இருக்கிறது. அவருடைய நிகழ்ச்சியெல்லாம் நடந்தால் அவரிடம் கேட்காமல் என்னிடம் தான் கேட்கிறார்கள். அரசியல் தலைவரான பிறகு அவருக்கும் எனக்குமான உறவு எப்படியிருக்கிறது என்று சொன்னால், எங்க வீட்டில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். அப்போது ஒரு பத்து நிமிடம் இருந்து பேசினார். அப்போது என்னை பாராட்டினார். பயங்கரமாக பண்ணுறப்பா என்கிறார். மற்றபடி நாங்கள் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை.
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…
தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் கிடைப்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் எஸ். கீர்த்தனா, மிகச் சரளமான ஹிந்தியில் பேசும் வீடியோ…