#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருபவர் அஜித். இவர் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாக்கி வருகிறது. லைக்கா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அஜர்பைஜானில் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் மீதம் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட உள்ளது.
#image_title
டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னதாக அஜித் நடித்து வரும் மற்றொரு திரைப்படமான குட் பேட் அக்லி திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அஜித் மற்றும் ஆதிக் என வித்தியாசமான கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
#image_title
கட்டாயம் அஜித்தின் திரைப்பாடல் வித்தியாசமான படமாக இந்த திரைப்படம் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் வரலாறு திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இப்படத்தின் மூலம் அஜித் மூன்று ரோல்களில் நடிக்கின்றார். இதுவும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தைப் பற்றி தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.
#image_title
அதாவது, குட் பேட் அக்லி படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் பொங்கலுக்கு உறுதியாக ரிலீஸ் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்கெரியாவில் ஷூட்டிங்க் நடைபெற்று வருகிறதாம். வேலைகள் வேகமாக போய்க்கொண்டு இருக்கிறது. இதனால் பொங்கலுக்கு வருவது உறுதி இருந்தாலும் டிசம்பர் மாதம் தான் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
வீடுகளில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் நோக்கில், 'தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை' முழுவீச்சில்…
தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகம் மேற்கொண்டு வரும் 'ஆள் தூக்கும்' அரசியல்…
2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத…
மத்தியப் பிரதேச மாநிலம் சின்வாரா மாவட்டத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம், ஒரு குடும்பத்தையே சிதைத்து நீதிமன்றத் தீர்ப்பு வரை…
தமிழக அரசியல் களத்தில் தற்போது ஒரு புதிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஇஅதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வர்…
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின (Semiquincentennial) கொண்டாட்டங்களுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஓஹியோ மாநில வானில் வியக்கத்தக்க…