கும்பகோணத்தில் அதிசயம்…. உச்சிப்பிள்ளையார் கோவில்…. வாழ்வில் வெற்றி அடைய இதன் 16 படிகளை ஏறினாலே போதும்…..!!!

By Srimathi on புரட்டாதி 9, 2025

Spread the love

கும்பகோணத்தில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவில், அந்நகரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. 16 படிகள் ஏறி வழிபடுவது சிறப்பு என்ற நம்பிக்கையோடு, இங்கு வரும் பக்தர்கள் தாங்கள் ஏறும் ஒவ்வொரு படியிலும் ஒரு புது அனுபவத்தை பெற்று, வாழ்வில் நன்மை அடைவதாக நம்புகின்றனர். இந்த கோவில் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் ஒரு பகுதியாக இருந்தாலும், இங்கே பிள்ளையாருக்கு பிரத்தியோக வழிபாடுகள் நடக்கிறது.

இந்தக் கோவிலின் வாயில், கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள 16 படிகள், நம் வாழ்க்கையில் 16 நிலைகளை குறிப்பதாக கருதப்படுகிறது. கல்வி, செல்வம், வீரம், வெற்றி என வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் முன்னேற்றம் அடைய, இந்த 16 வழிகள் ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது. இந்தப் படிகளை ஏறி சுவாமியை வழிபடுவதன் மூலம், நம் வாழ்வில் சுலபமான வெற்றி கிட்டும். இந்தக் கோவிலில் ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி அன்றும் சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்தப்பட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து வழிபடுவார்கள். மேலும் திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள், இந்த கோவிலுக்கு சென்றால் அதே பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் ராகு, கேது தோஷம் உள்ளவர்களுக்கு, இது ஒரு பரிகார தளமாக கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் உள்ளவர்கள், தங்கள் வாழ்வில் உள்ள பிரச்சனைகளுக்காக இங்கு வந்து வழிபட்டு, விடிவு பெறுவதாக கூறுகின்றனர்.