சென்னையில் ஆறு வயது சிறுமியிடம் நைசாகப் பேசி அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் இருவரால் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. வீட்டின் மேல்மாடியில் வைத்து தனக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் சம்பந்தப்பட்ட இரு இளைஞர்களையும் பிடித்துச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்த இளைஞர்களைக் மீட்டு விசாரணை நடத்தி வருவதுடன், சிறுமியின் புகாரின் பேரில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
