நடுரோட்டில் பயங்கரம்…! “பின்னாலிருந்து மோதிய அதிவேக டெம்போ…” தூக்கி வீசப்பட்டு 2 பெண்கள் படுகாயம்… வைரலாகும் திக் திக் வீடியோ….!!

By Devi Ramu on ஐப்பசி 5, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் – சாங்லி நெடுஞ்சாலையில் ஹாட்கணங்லே பகுதி அருகே, சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த மூன்று பெண்கள் மீது பின்னாலிருந்து வந்த அதிவேக டெம்போ வாகனம் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து கொடூரமாக மோதியுள்ளது.

இந்த விபத்தின் தாக்கம் எந்தளவுக்குக் கடுமையாக இருந்தது என்றால், டெம்போ மோதியதில் இரண்டு பெண்கள் தூக்கி வீசப்பட்டு சாலையில் பல மீட்டர்கள் தள்ளி விழுந்து பலத்த காயமடைந்தனர். அவர்களுடன் நடந்து சென்ற மூன்றாவது பெண் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி மயிரிழையில் உயிர் தப்பினார். இந்த நெஞ்சை உறைய வைக்கும் ஒட்டுமொத்த சம்பவமும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

   

சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் காயமடைந்த பெண்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.