தமிழ்நாட்டை சேர்ந்த வைத்தியலிங்கம் முத்துக்குமார்(49) என்பவர் சிங்கப்பூரில் தற்போது வசித்து வருகிறார். இவர் 2007 ஆம் ஆண்டு சிங்கப்பூர் நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் 2011ஆம் ஆண்டு முதல் உடன்வேலை பார்க்கும் சல்மா பீ அப்துல் ரசாக் (43) என்ற பெண்ணுடன் உறவில் இருந்து வந்துள்ளார். வைத்தியலிங்கம் முத்துக்குமாருக்கு திருமணம் ஆனது தெரிந்தும் அப்பெண் பழகி வந்துள்ளார். இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இரண்டாவது மனைவிக்கு செப்டம்பர் 2023 ஆம் ஆண்டில் குழந்தையின் பிறந்துள்ளது. குழந்தை பிறந்த அன்று முதல் மனைவியிடம் வசமாக சிக்கிக் கொண்டார். குழந்தை பிறந்த மருத்துவமனையில் முதல் மனைவி வேலை பார்த்ததாக தெரியவந்துள்ளது. சோதனை சாவடி ஆணையத்தில் நிரந்தர குடியிருப்பிற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் முத்துக்குமார் விண்ணப்பித்துள்ளார். முதல் மனைவியை ஆதரவாளராக பட்டியலிட்டு விண்ணப்பித்துள்ளார். இரண்டாவது திருமணம் செய்தது தெரியவந்து அக்டோபர் மாதத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஒரே சமயத்தில் இரண்டு பேரை திருமணம் செய்து ஏமாற்றிய குற்றத்துக்காக மூன்று மாதம் பிளஸ் மூணு வாரம் ஜெயிலில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறுக்கு சிங்கப்பூரில் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் இந்திய மதிபில் சுமார் 6.77 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டுமாம் . தற்போது முத்துக்குமார் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை ஏமாற்றியதற்காக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பது, மாநில அரசியலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில்…
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும், நாடாளுமன்ற…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து அவர் முழுமையாக மீண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.…
ஐரோப்பிய நாடுகளில் பிரான்சின் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்களை நிலைநிறுத்தும் திட்டத்திற்கு ரஷ்யா கடும்…