ஐயோ கடவுளே… பல்கலைக்கழகத்தில் அடுத்தடுத்து இரு மாணவர்கள் தற்கொலை… 6 நாட்களில் நிகழ்ந்த அடுத்த அதிர்ச்சி… பின்னணி என்ன?… குஜராத்தில் அரங்கேறிய சோகம்…!

By Swetha on புரட்டாதி 26, 2026

Spread the love

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள மார்வாடி பல்கலைக்கழகத்தில் 20 வயது பொறியியல் மாணவர் ஒருவர் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இவர் தனது உடல்நலக் குறைவு காரணமாக தீவிர மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதே பல்கலைக்கழகத்தில் 19 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் சுவடு அழிவதற்குள், அடுத்த ஆறு நாட்களிலேயே இந்த இரண்டாவது சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், மாணவரின் தற்கொலைக்கான முழுமையான காரணங்கள் மற்றும் பின்னணிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் மனநலனை மேம்படுத்தவும், இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.