தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி மற்றும் சன் டிவிக்கு அடுத்தபடியாக அதிகப்படியான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது ஜீ தமிழ். ஆனால் இந்த சேனலில் ஒளிபரப்பாக கூடிய சீரியல்கள் அடுத்தடுத்து ஓரிரு வருடங்களில் முடிவுக்கு வந்து விடுகின்றன. அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட நினைத்தேன் வந்தாய் என்ற சீரியல் விரைவில் முடிய உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. காதல் மற்றும் எமோஷன் என அனைத்தும் கலந்த தொடராக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நினைத்தேன் வந்தாய் என்ற சீரியலை பிரம்மா ஜி தேவ் என்பவர் ஆரம்பத்தில் இயக்கி வந்த நிலையில் தற்போது ஜீவ ராஜன் என்பவர் இயக்கி வருகின்றார்.

இந்த சீரியல் சுமார் 250 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவுக்கு வரவுள்ளது. இந்த சீரியலில் கணேஷ் வெங்கட்ராம் மருத்துவர் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக கீர்த்தனா மற்றும் அபிராமி வெங்கடாசலம் நடித்து வருகின்றனர்.பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் மனோகரியின் சுயரூபம் வெளியே வர தொடங்கியுள்ளது.
/indian-express-tamil/media/media_files/HgOORVgB5zmbpBc8Sbmi.jpg)
இப்படியான நிலையில் நினைத்தேன் வந்தாய் சீரியல் கிளைமாக்ஸ் எட்ட உள்ளதாகவும் விரைவில் சீரியல் முடிவுக்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மற்றொரு சீரியலும் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நினைத்தாலே இனிக்கும் சீரியல் தான் தற்போது முடிவுக்கு வர உள்ளதாம். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் நன்றாக தானே ஓடிக்கொண்டிருக்கிறது ஏன் முடிவுக்கு கொண்டு வருகிறீர்கள் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.
