“ஐயோ காப்பாத்துங்க…” சுற்றுலா முடிந்து திரும்பிய செவிலியர் மாணவர்கள் அலறல்… நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து… இருவர் பரிதாபமாக பலி… பெங்களூரில் நடந்த சோகம்…!

By Swetha on ஆவணி 21, 2026

Spread the love

பெங்களூரு-கோவா நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் இருவர் உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், கோவாவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு தனியார் பேருந்தில் ஊர் திரும்பிச் கொண்டிருந்தனர். இந்நிலையில், சித்ரதுர்கா மாவட்டம் ஐமங்களா அருகே தேசிய நெடுஞ்சாலை 48-இல் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பேருந்தில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்புப் படையினரின் உதவியோடு மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

   

அதிவேகமாக வந்த பேருந்தை இயக்கிய ஓட்டுநர், நள்ளிரவு நேரத்தில் தூக்கக் கலக்கத்தில் இருந்ததே இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என காவல்துறை முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்து குறித்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.