தரமான சம்பவத்தை நிகழ்த்திக் காட்டிய விஜய் சேதுபதி… பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட 2 போட்டியாளர்கள்!

By Elango on தை 3, 2026

Spread the love

பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக 2 போட்டியாளர்கள் ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட தகவல் இப்போது சுடச்சுட வெளியாகி உள்ளது. நேற்று பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ பினாலே போட்டியில் கார் டாஸ்க் நடந்தது. இதில் காருக்குள் இருந்த சாண்ட்ராவை பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் சேர்ந்துக்கொண்டு தகாத வார்த்தைகளில் பேசி இழிவுபடுத்தினர்.

ஒருகட்டத்தில் அவர்கள் இருவரும் சேர்ந்துக்கொண்டு காருக்குள் இருந்த சாண்ட்ராவை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து உதைத்து காருக்கு வெளியே தள்ளினர். இதில் பேனிக் அட்டாக் ஏற்பட்டதால் சாண்ட்ரா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். இது பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பிக்பாஸ் தொகுப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி கம்ருதீன் பார்வதி இருவரையும் ரெட் கார்டு கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றியது பிரமோவாக வெளியாகி பாராட்டை பெற்று வருகிறது.