திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கர்லம்பாக்கம் காலனியில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக மேல்நிலை குடிநீர் தொட்டியின் மூலமாக குடி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்தப் பகுதியில் வசித்து வரக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள். இதனிடையே திடீரென்று இந்த கிராமத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் வாந்தி போன்றவை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இன்று முறையாக பராமரிக்கப்படாமல் விநியோகிக்கப்பட்ட குடி தண்ணீர் தான் காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த சுதா என்ற பெண்ணும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடலை பெற்ற இறுதிச் சடங்கு செய்து கொண்டிருந்தபோது சுதாவின் கால்கள் அசைந்ததாக தெரிகிறது. இதனால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த ஊர் மக்கள் இருவரின் இறப்புக்கும் குடிநீர் பிரச்சனை தான் காரணம் என நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், போலீசார் அந்த இடத்தில் குவிக்கப்பட்டு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரான ஆனந்தராஜ், தனது 22 வயது ஊழியர் கிரண் மற்றும் அவரது 19 வயது மகளைத் தனது…
கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…