அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

By Devi Ramu on ஐப்பசி 28, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற நபரின் கால் துண்டானதோடு, பைக் ஓட்டி வந்த வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பாசப்புரா பகுதியில் 3 நாட்களுக்கு முன்பு இக்கொடூர விபத்து அரங்கேறியுள்ளது. ஃபார்ச்சூனர் கார், அதிவேகமாக வந்து அங்கிருந்த பைக் மற்றும் சைக்கிள் மீது மிகக் கொடூரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் சைக்கிளில் சென்ற நபரின் கால் முற்றிலும் துண்டாகி வீசப்பட்ட நிலையில், பைக்கில் சென்ற மூர்த்தி (26) என்ற வாலிபர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

   

விபத்தை ஏற்படுத்திய டிரைவர், காயமடைந்தவர்களைக் காப்பாற்றாமல் காரைப் பின்னோக்கி எடுத்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடியுள்ளார். டிரைவர் மதுபோதையில் காரை ஓட்டி வந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. படுகாயமடைந்த இருவரும் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெட்டிசன்களை உலுக்கியுள்ள நிலையில், எலக்ட்ரானிக் சிட்டி போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய காரையும் அதன் டிரைவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.