BREAKING: மேலும் 2 MLA-க்கள் ராஜினாமா?… அதிமுகவுக்கு விழுந்த மரண அடி… இன்னும் 6 நாட்களில் ஆட்டம் க்ளோஸ்?…. அடுத்த பரபரப்பு….!

By Nanthini on ஆனி 15, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 22-ஆம் தேதி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கத் திட்டமிட்டுள்ள அவர்கள், அதன்பின் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை சந்தித்து அக்கட்சியில் இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் குறித்து சி.விஜயபாஸ்கர் இன்று பகிரங்கமாக அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையில், இந்த திடீர் அரசியல் மாற்றம் அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெகவின் அரசியல் வருகைக்குப் பிறகு மூத்த தலைவர்கள் அக்கட்சியை நோக்கி நகரத் தொடங்கியிருப்பது, வரும் காலங்களில் தமிழகத்தின் அரசியல் களத்தை முழுமையாக மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.