டாஸ்மாக் பார் உரிமையாளர்களுக்கு அரசு கொடுத்த திடீர் சர்ப்ரைஸ்… தமிழக அரசின் நள்ளிரவு அதிரடி முடிவு….!

By Nanthini on ஆடி 7, 2026

Spread the love

தமிழகத்தில் டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர் கால அவகாசம் கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பு மற்றும் நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு, தமிழக அமைச்சர் விக்னேஷ் தலைமையில் துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவின்படி, டாஸ்மாக் பார்களின் டெண்டர் காலக்கெடுவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி முடிவின் மூலம், தற்போதைய பார் உரிமையாளர்கள் புதிய டெண்டர் நடைமுறைகள் முடியும் வரை தங்களது பார்களை எவ்வித தடையுமின்றி தொடர்ந்து தடையின்றி நடத்திக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.