புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆகாத அந்தப் பெண், தனது கிராமத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு அரிசி ஆலையில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று மாலை வேலை முடிந்து வீட்டிற்குச் செல்வதற்காக அந்தப் பெண் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக காரில் வந்த இரண்டு நபர்கள், “ஊருக்குள் இறக்கி விடுகிறோம்” என்று கூறி அவரை காரில் ஏற அழைத்துள்ளனர். அதற்கு அந்தப் பெண் மறுப்புத் தெரிவித்த நிலையிலும், அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர், சற்று தொலைவில் உள்ள ஒரு குளக்கரைக்கு அருகே மக்கள் நடமாட்டமில்லாத தனிமையான பகுதிக்கு அந்தப் பெண்ணைக் கொண்டு சென்று, இருவரும் மிகக் கொடூரமாகப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பிறகு, மயக்க நிலைக்குச் சென்ற அந்தப் பெண்ணைக் கறம்பக்குடி – ஆலங்குடி சாலையில் வீசிவிட்டு அந்த கும்பல் காரில் தப்பியோடியுள்ளது. சிறிது நேரத்திற்குப் பின் மயக்கம் தெளிந்து அந்தப் பெண் அழுது கூச்சலிடவே, அப்பகுதி மக்கள் அவரை மீட்டு போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த கார் உரிமையாளரும் ஓட்டுநருமான சேகர் (53) மற்றும் அவரது நண்பரான கூலித்தொழிலாளி மாரிமுத்து (52) என்பது தெரியவந்தது. உடனடியாக மாரிமுத்துவை கைது செய்த தனிப்படை போலீசார், தலைமறைவாகி திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளியான சேகரையும் தற்போது அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த அங்குஷ் சவுத்ரி என்பவருக்கும், லலிதா என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவிக்கும் இடையே…
அகமதாபாத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற நகைக்கடையில் பணிபுரிந்து வந்த ஹர்ஷிதா ஷெட்டி என்ற இளம்பெண், ஏற்கனவே திருமணமான தனது காதலனுடன்…
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அண்மையில் இணையத்தில் பரப்பப்பட்ட பல்வேறு போலிச் செய்திகளை…
ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் (Ebola Virus) மிகத் தீவிரமாகப் பரவி…
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் ஸ்மிதா சதாசிவம் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர், முதலமைச்சர் ஜோசப் விஜய்யைச் சந்தித்துப்…
தூத்துக்குடியைச் சேர்ந்த பூல்பாண்டியன் என்ற முதியவர், யாசகம் எடுத்துச் சேர்த்த பணத்தில் இருந்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை…