அட கொடுமையே… மரத்துக்காக மனுஷ உயிரா?… வேப்பமரத் தகராறில் இருவர் பலி… எஸ்.ஐ மீது தாக்குதலால் எர்ரகட்டாவில் பதற்றம்… நடுங்க வைக்கும் கொடூரம்…!

By Swetha on ஆவணி 29, 2026

Spread the love

எர்ரகட்டா கிராமத்தில் வேப்பமரத்தை மையமாக வைத்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வீட்டின் அருகே நின்றிருந்த மரத்தின் உரிமை தொடர்பாக எழுந்த தகராறு முற்றியதால், இரு தரப்பினரும் தடிகளால் பரஸ்பரம் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இதில் வெங்கடேஷ்வரு யாதவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் சைத் உயிர் இழந்தார்.

சம்பவத்தs அறிந்த மெல்லச்செருவு காவல்துறையினர் உடனடியாக கிராமத்திற்கு விரைந்து சென்று நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் கலவரத்தை அடக்க முயன்ற காவல் துறையினர் மீதும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் சார்பு ஆய்வாளர் நவீன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

   

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் கூடுதல் படைகளைக் குவித்து நிலைமையைக் கண்காணித்து வருவதுடன், வன்முறையில் ஈடுபட்டவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.