2-வது திருமணம்…! நிச்சயம் செய்த பெண்ணை நண்பனுடன் பார்க்க சென்ற வாலிபர்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!

By Devi Ramu on புரட்டாதி 10, 2025

Spread the love

சேலம் மாவட்டம் சாணாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கு திருமணமாகி விவாகரத்து ஆனது. இவருக்கு இரண்டாவது திருமணம் செய்வதற்காக திருச்சி மாவட்டம் முறையூரில் பெண் பார்த்து நிச்சயம் செய்துள்ளனர். அந்த பெண்ணை பார்ப்பதற்காக மோகன்ராஜ் தனது நண்பரான தினேஷ்குமார்(28) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

இவர்கள் வரதராஜபுரம் பிரிவு சாலை அருகே சென்ற போது அந்த வழியாக வந்த மற்றொரு வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தினேஷ்குமார், மோகன்ராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.