BIG NEWS: திமுகவில் 2 MLA-க்கள் ராஜினாமா?…. அரசியலில் அடுத்த பரபரப்பு… செம ஷாக்கில் ஸ்டாலின்…!

By Nanthini on ஆனி 26, 2026

Spread the love


திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலக முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள அதிரடித் தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் அவசர உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்த கையோடு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மதிமுகவின் சீர்காழி மற்றும் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் தங்களது பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொகுதிப் பங்கீடு மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த அதிருப்தியே இந்த திடீர் விலகலுக்குக் காரணம் என்று கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் திமுக கூட்டணியிலும் ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்திலும் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.