3-ம் உலகப் போருக்கு அடித்தளமிட்ட டிரம்பின் கையெழுத்து….. 450 ட்ரோன்கள் பறந்து வந்த இரவு… ரஷ்யாவுக்கு செக்.. பதறும் உலக நாடுகள்…!

By Nanthini on புரட்டாதி 20, 2026

Spread the love

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய பேரளவிலான ட்ரோன் தாக்குதல், அப்பகுதியில் கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவால் சற்றும் எதிர்பார்க்கப்படாத இந்தத் தாக்குதலில், சோஃபினோ பகுதியைச் சேர்ந்த 44 வயதுப் பெண் மற்றும் ஒரெகோவோ-ஜுவேவா மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர்; மேலும் அறுவர் காயமடைந்தனர். மாஸ்கோவை நோக்கி வந்த சுமார் 450 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ள நிலையில், ஒட்டுமொத்தப் பிராந்தியத்திலும் 249 ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமாக, மாஸ்கோவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்ததோடு, அருகிலுள்ள சில குடியிருப்பு வீடுகளிலும் தீ பரவியது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மாஸ்கோவின் முன்னணி சர்வதேச விமான நிலையங்களான ஷெரெமெட்டியேவோ மற்றும் வ்னுகோவோ ஆகியவற்றில் விமானங்கள் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் தற்காலிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பின்னர் நீட்டிக்கப்பட்டன.

   

மாஸ்கோ மீதான இந்த அதிரடித் தாக்குதலுக்கு ரஷ்யா உடனடியாகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. உக்ரைனின் கீவ் மற்றும் சுமி பிராந்தியங்களைக் குறிவைத்து ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கீவ் அருகே உள்ள ஃபாஸ்டிவ் நகரில் தாயும் அவரது இரண்டு சிறு குழந்தைகளும் கொல்லப்பட்ட நிலையில், சுமி பிராந்தியத்தில் பொதுமக்கள் பயணித்த கார் மீது ரஷ்ய ட்ரோன் தாக்கியதில் நான்கு பேர் பலியாகினர்.

   

போர்க்கள மோதல்கள் ஒருபுறம் தீவிரமடைந்து வர, அரசியல் தளத்திலும் புதிய நெருக்கடிகள் உருவெடுத்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஒப்புதலுடன் ரஷ்யா மீதான புதிய தடைகள் மசோதா கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம், ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது 100% வரை வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. இச்சட்டம், ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் அமெரிக்காவின் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.