BREAKING: 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து… 7 பேர் பரிதாப பலி..!!

Spread the love

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்திற்கு உட்பட்ட பார்டோலி நகரின் யுவா கிராம தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. சூரத்தில் இருந்து மகாராஷ்டிராவின் துலே நோக்கிச் சென்ற மகாராஷ்டிர மாநில அரசுப் பேருந்தும், சாலிஸ்கயோனில் இருந்து சூரத் நோக்கி வந்த மற்றொரு பேருந்தும் இந்த விபத்தில் சிக்கின. நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு பேருந்து அங்கு வந்த டிராக்டர் மீது மோதியது.

டிராக்டர் மீது மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரைத் (டிவைடர்) தாண்டி மறுபக்கத்திற்குப் பாய்ந்தது. அப்போது எதிரே வந்த மற்றொரு பேருந்தின் மீது அது மிகக் கொடூரமாக மோதியது. இரு பேருந்துகளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்ட இந்த விபத்தில், பேருந்துகளில் பயணம் செய்த 7 பயணிகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Soundarya

Recent Posts

கிளப்பிவிட்ட உதயநிதி.. எகிறிய சேகர்பாபு.. எண்ட் கார்டு போட்ட அமைச்சர் ரமேஷ்… சட்டமன்றத்தில் நடந்த அந்த விஷயம் என்ன..?

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, அறநிலையத்துறை பள்ளி, கல்லூரிகளை நடத்தக்கூடாது என்ற பாஜகவின் நிலைப்பாட்டில் தமிழக அரசு உள்ளதா…

57 seconds ago

“16-வது நாள் காரியத்திற்கு வந்த குடும்பத்தினர்”… மயானத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை….!

கோவையில் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை ஒரு கும்பல் நள்ளிரவில் தோண்டி எடுத்து, அதனுடன் வைக்கப்பட்டிருந்த மூன்றரை சவரன் தங்க நகையைத்…

3 minutes ago

அம்மாவுக்கு கொடுத்த முதல் கிபிட்… CM விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி…? 30 ஆண்டாகத் தாய் ஷோபா பாதுகாக்கும் நெகிழ்ச்சிப் பரிசு…!

தமிழக முதல்வரும், முன்னாள் பிரபல நடிகருமான சி. ஜோசப் விஜய் அவர்களின் 52-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது தாயார் ஷோபா…

6 minutes ago

காலையிலேயே ஷாக்..! பதவியை ராஜினாமா செய்யும் செல்வப்பெருந்தகை…? அதிர்ச்சியில் காங்கிரஸ்..!!

டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்களைச் சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை…

7 minutes ago

திடீர் திருப்பம்… மீண்டும் திமுக – காங்கிரஸ் கூட்டணி.. தமிழக அரசியலை தலைகீழாக மாற்றப்போகும் அந்த ஒரு ட்வீட்….!

தமிழக அரசியலில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியைத் தடுப்பதையே முதன்மை இலக்காகக் கொண்டுள்ள திமுகவும், தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த…

8 minutes ago

ரூ .8 கோடி மோசடி செஞ்ச உனக்கு TVK பாதுகாப்பாடா.? சொந்த கட்சி எம்எல்ஏ-வை போனில் வெளுத்து வாங்கிய பிரமுகர் – வைரலாகும் ‘பீப்’ ஆடியோ…!!

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அக்கட்சியினரின் பல்வேறு செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி வருகின்றன. அந்த வகையில்,…

14 minutes ago