எதுவும் அறியாத இளம்பெண்…!! வாழ்க்கையை சீரழித்த 2 சிறுவர்கள்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!

By Devi Ramu on மார்கழி 29, 2025

Spread the love

சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தில், மனநலம் குன்றிய 21 வயது இளம் பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அவரது பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரங்களில், அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அந்தப் பெண்ணிற்குத் தொடர்ச்சியாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, வாந்தி மற்றும் மயக்கம் வந்துள்ளது. இதனால் பதற்றமடைந்த பெற்றோர், அவரை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள், அந்தப் பெண் தனியாக இருந்ததைப் பயன்படுத்தி அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.