மருந்தை மாற்றி கொடுத்த தாய்.. ஒரே நேரத்தில் உயிரிழந்த இரட்டைப் பெண் குழந்தைகள்… நெஞ்சை உலுக்கும் சோகம்..!

By Nanthini on ஆடி 12, 2025

Spread the love

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி மற்றும் தனலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் இருந்த நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.  இந்த தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 8 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த 11 மாதங்களுக்கு முன்னதாக இரட்டை குழந்தைகளும் பிறந்துள்ளன. சில நாட்களாக காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் இரட்டை குழந்தைகளும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனால் பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் குழந்தைகளுக்கு பலன் இல்லாததால் நாட்டு மருந்து கொடுக்க முடிவு செய்தனர்.

பிறகு நாட்டு மருந்து கொடுத்தும் சரி ஆகாததால் ஆங்கிலம் மருந்தையும் தாய் சேர்த்துக் கொடுத்து வந்துள்ளார். இப்படியான நிலையில் இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.