தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விட வேண்டும் என்ற நிலைப்பாடோடு மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். மறுபக்கம் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இப்படி மாறி மாறி கட்சியினர் தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபட்டு வர முக்கிய பிரபலங்களும் கட்சியில் இணைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் அதிமுக – பாஜக கூட்டணியின் மறைமுக பார்ட்னராக TVK விஜய் செயல்படுகிறார் என்று வன்னியரசு விமர்சித்துள்ளார். திமுக- பாஜக இடையே மறைமுக கூட்டணி என குற்றச்சாட்டு வைக்கும் விஜய், அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்றார். அதை செய்யாமல் எடப்பாடி முன்மொழிந்ததை வழிமொழிந்தனர். இதன் மூலம் அதிமுகவுடன் TVK மறைமுக கூட்டணி வைத்திருப்பது அம்பலமாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…