தமிழகத்தில் TVK ஆட்சி அமைத்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள சூழலில், அரசின் செயல்பாடுகள் குறித்துத் தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பு முதலமைச்சர் விஜய்க்கு சாதகமான முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது. மொத்தம் 5,090 பேரிடம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில், TVK அரசின் 100 நாள் ஆட்சியை 30.06% பேர் ‘மிக நன்று’ என்றும், 28% பேர் ‘நன்று’ என்றும் தெரிவித்துள்ள நிலையில், 18.39% பேர் ‘சுமார்’ என்றும் 20.72% பேர் மட்டுமே ‘அதிருப்தி’ என்றும் பதிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் 58%க்கும் அதிகமான மக்களின் ஆதரவை இவ்வாட்சி பெற்றுள்ளது தெளிவாகிறது. மேலும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசின் மீது விமர்சனங்களை முன்வைத்து வரும் வேளையில், உதயநிதி ஸ்டாலினின் கைது நடவடிக்கை குறித்த கேள்விக்கு 42.98% பேர் அதை வரவேற்பதாகவும், 27.77% பேர் மட்டுமே அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கருத்துக் கூறியுள்ளனர். இந்த சர்வே முடிவுகள், திமுகவின் அதிருப்திப் பிரசாரத்திற்கு மாறாக, தற்போதைய ஆட்சி மற்றும் நடவடிக்கைள் மீது மக்களிடையே கணிசமான ஆதரவும் நம்பிக்கையும் நிலவுவதைச் சுட்டிக்காட்டுகின்றன.
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…
சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முதல்…
விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு திபன் மையம் அருகே ஏற்பட்ட திடீர் மோதலில், ரவுடி ஷீட்டர் வட்டாடி கிருஷ்ணா என்பவர் சந்தோஷ்…
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குணியால் கிராமத்தில் அமைந்துள்ள மாதா பரணா தேவி கோவிலில்…
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள குடும்பம் ஒன்றில் ஒரே நேரத்தில் 4 நல்வரவுகள் வருகை தந்துள்ள சம்பவம்…