BIG BREAKING: தவெக அரசுக்கு ஆதரவு வாபஸ்…. சற்றுமுன் பரபரப்பு…!

By Nanthini on ஆவணி 9, 2026

Spread the love

திமுகவை வீழ்த்துவதே பிரதான நோக்கம் என்பதாலேயே தவெக அரசுக்கு ஆதரவு அளித்தோம் என்றும், அந்தச் சூழல் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கோவையில் தெரிவித்துள்ளார். மேலும், பொள்ளாச்சி ஜெயராமன் பல்வேறு தவறுகளைச் செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், உண்மை நிலையை உணராமல் அவரை நம்பும் கட்சி நிர்வாகிகள், தங்களை ‘துரோகிகள்’ என்று விமர்சிப்பதில் எந்தவித நியாயமும் இல்லை என்றும் ஆதங்கத்துடன் கூறினார்.

தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை அரசினர் தனித் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ள அரசியல் சூழலில், எஸ்பி வேலுமணியின் இந்த அதிரடி பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதங்களையும் கிளப்பியுள்ளது.